Uncategorized

இளையர்களும் நற்பண்புகள்

காலையில் செய்தித்தாளைப் பிரித்துப் பார்த்தால் போதும். ‘பெண்ணை அச்சுறுத்திய இளையர்’ மற்றும் ‘பொது இடத்தில் புகைப்பிடித்துக்கொண்டிருந்த உயர்நிலைப் பள்ளி மாணவன்’ போன்ற தவறான செயல்களைப் பற்றி தான் செய்திகள் உள்ளன. ‘சாலையில் உயிரை இழக்க நேர்ந்த குழந்தையைக் காப்பாற்றிய சிறுவன்’ போன்ற பெருமைப்படக்கூடிய செய்திகளை இக்காலத்தில் அதிகமாகக் காணமுடிவதில்லை.

ஏன் இந்த நிலை?

இளையர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணமே இல்லயா?

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி‘ என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருப்பீற்கள். இக்கால இளையர்களை நம்பி தான் ஒரு நாடே இருக்கிறது. நாளை இவர்கள் தான் நாட்டை ஆளப் போகிறார்கள். எனவே, அவர்களிடம் சில நற்பண்புகள் கட்டாயமாக இருக்கவேண்டும்.

முதலில் நேர்மை இருக்கவேண்டும். நேர்மையே சிறந்த கொள்கை என்று அனைவரும் அறிந்திருக்கிறோம். அக்கால இளையர்கள் உன்மையை மட்டுமே பேசினார்கள். பொய் சொல்வதில் எந்த பயனும் இல்லை என்றும் பொய் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் இக்கால இளையர்களோ, அவ்வாறு அல்ல. ‘ஒரு முறை தானே, ஒரு முறை தானே’ என்று பல சூழ்நிலைகளில் பொய் சொல்லிவிடுகிறார்கள். அவர் சொல்வதையும் பிறர் நம்பிவிடுகிறார்கள். இவ்வாறு இளையர்கள் நடந்துகொண்டால் பிற்காலத்தில் சமுதாயத்தில் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம். எனவே, இக்கால இளையர்களிடம் நேர்மையைக் காண விரும்புகிறேன்.

பிறகு, ஒரு இளையரிடம் உழைப்பு இருக்கவேண்டும். உழைக்கவேண்டும் என்றால் ஊக்கம் வேண்டும். இருந்தும், அனைவராலும் தாங்கள் நினைத்ததை சிறப்பாகச் செய்து முடிக்க முடிவதில்லை. ஆனால், அவர்கள் மன உரத்துடன் அடுத்த படியை நோக்கிச் செல்லவேண்டும். ‘உடைந்த கைகளைக்கொண்டு உழைக்கலாம், ஆனால் உடைந்த உள்ளத்தைக் கொண்டு உழைக்க முடியாது‘ என்பது நிச்சயம். இளையர்கள் உழைக்காவிட்டால் சோம்பேரிகளாகிவிடுவர். இதனால் நாலை ஒரு நல்ல வேலையைத் தேடி சேர்வது மிகவும் சிரமமாகிவிடும். இளையர்களின் கடமை நன்றாக படித்து சிறந்த வேலையில் சேர்ந்து தங்களுடைய பெற்றோரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.

இவற்றையெல்லாம் செய்யவேண்டுமானால் இச்சமயத்திலிருந்தே ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்லவேண்டும். பள்ளியிலும் வீட்டிலும் பொது இடங்களிலும் சிறந்து விளங்கவேண்டும். மற்றவர்கள் நம்மை புகழும்படி நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

முக்கியமாக, சிக்கனம் தேவை. உதாரணத்திற்கு பணம். இப்போதெல்லாம் இளையர்கள் பணத்தைச் செலவிடுவதற்கு முன் யோசிப்பதில்லை. பொருளை வாங்கி சில நாட்களுக்குப் பிறகு, ‘ஏன் தான் இதை நான் வாங்கினேன் என்று எனக்கே தெரியவில்லையே’ என்று வருந்துகின்றனர். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. மேலும், தங்கள் பெற்றோர் சிரமப்பட்டு அல்லும் பகலும் உழைத்துச் சம்பாதித்த பணத்தை தான் அவர்கள் செலவிடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடுகின்றனர். இப்பழக்கமே நாளை சூதாட்டத்தில் ஈடுபட காரணம் ஆகிவிடும். பணத்தை வீனாக்குவதில் என்ன பயன் கிடைக்கிறதோ.

இன்றைய இளையர் நாளைய தலைவர்‘ என்று கூறுகின்றனர். இதற்கேற்ப அனைத்து இளையர்களும் நடந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் நாடும் முன்னேறும், பிறருக்கும் நம்மேல் நல்ல எண்ணமும் அபிப்பிராயமும் உண்டாகும்.

1 thought on “இளையர்களும் நற்பண்புகள்”

Leave a comment